செய்முறைப்பயிற்சி 1:கடுமையான நாள்பட்ட ஊட்டச்சத்துக் குறைபாடு இருப்பதனை மதிப்பிடுதல்
செய்முறைப்பயிற்சி 1: மேற்கையின்(புஜம்) நடுப்பாகத்தின் சுற்றளவினை அளவெடுத்தல்
மற்றும் எடிமா(கால் வீக்கம்) இருக்கிறதா என சோதித்தல்
" 24 மாத வயது கொண்ட அல்மாஸ் ஹபிட்ஷோ, கொருகுட்டி என்னும் இடத்தின் சமூக தன்னார்வலர்களால் அலபாமா உடல் ஆரோக்கிய மையத்திற்கு "
மேற்கொண்டு ஊட்டச்சத்து மிதிப்பீடுகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டார்
அடிக்கடியான நீர்த்த வயிற்றுப்போக்கினால் குழந்தை அவதிப்படுவதாக அல்மாஸின் தாய் தெரிவித்தார்.
இது ஒரு மாதத்திற்கும் மேலாக தினசரி 3 லிருந்து 4 முறை இருப்பதாக தெரிவித்தார்.
ஆனால் இரண்டு வாரத்திற்கு முன்னர் வயிற்றுப்போக்கு நின்றுவிட்டது
"அல்மாஸ் அனைத்து தடுப்பு மருந்துகளும் கொடுக்கப்பட்டிருப்பதாகவும் ஆனால்,"
தடுப்பு மருந்து அடையாள அட்டை தொலைந்து விட்டது எனவும் தாய் தெரிவித்தார்
அவள் வைட்டமின் ‘ஏ’ மற்றும் சிறுகுடல் புழுக்களுக்கான மாத்திரைகளை
கடந்த மாத முகாமின்போது பெற்றுக் கொண்டிருக்கவில்லை.
கடந்த 6 மாதங்களில் இருந்து அல்மாஸ் தாய்ப்பால் எடுத்துக்கொள்வதுமில்லை
வீட்டில் என்ன உணவு இருக்கிறதோ அதைத்தான் அவள் எடுத்துக்கொண்டிருக்கிறாள்.
"உடல் ஆரோக்கிய பணியாளர், "
அல்மாஸை நேராக நிமிர்த்தி நிற்க வைக்க தாயிடம் கூறி
இடது புஜத்தினை மூடியிருக்கும் உடையை அகற்றுகிறார்.
உடல் ஆரோக்கியப் பணியாளர் இடது புஜத்தின் நடுப்புள்ளியை கணிக்கிறார்
புஜத்தைத் தூக்கிப்பிடித்து அதைச்சுற்றி புஜத்திற்கான பட்டையை
அதன் மீதிருக்கும் எண் நேராகத் தெரிவதை உறுதிப்படுத்தி சுற்றுகிறார்.
பட்டை சருமத்தைச் சுற்றி தட்டையாக இருப்பதையும்
இறுக்கம் தளர்வாக அல்லது மிகஇறுக்கமாக இல்லாதிருப்பதை உறுதி செய்கிறார்.
உடல் ஆரோக்கியப் பணியாளர் நடு புஜத்தின் சுற்றளவினை
அளவெடுத்து பதிவு செய்துகொள்கிறார்.
அளவெடுத்த நடு புஜத்தின் அளவினை நீங்கள் தயவு செய்து எழுதவும்
நீங்கள் எடுத்த அளவு எவ்வளவு?
எங்களுடைய நடு புஜத்தின் சுற்றளவு அள்வீடு 10.4 செமீ.
அல்மாஸின் நடு புஜத்தின் அளவு பற்றி உங்கள் கருத்து என்ன?
நடு புஜத்தின் அளவுப்படி அவள் கடுமையான
ஊட்டச்சத்து குறைபாட்டில் இருக்கிறாளா?
6 மாதம் முதல் 18 வயது வரையிலான ஒரு குழந்தையின் நடு புஜத்தின் அளவீடு 11 செமீ க்கும் குறைவாக இருந்தால்
அவர் கடுமையான நாள்பட்ட ஊட்டச்சத்துக் குறைபாடு கொண்டிருக்கிறார்.
அல்மாஸின் நடு புஜத்தின் அளவீடு 10.4 செமீ
மற்றும் அவர் 24 மாத வயதுடையவளாக இருக்கிறாள்
"ஆகையினால், அவளுடைய நடு புஜத்தின் அளவீடு 11 செமீ க்கும் குறைவாக இருப்பதால் "
அல்மாஸுக்கு கடுமையான நாள்ப்பட்ட ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ளது
அல்மாஸின் இரண்டு பாதங்களிலும் உடல் ஆரோக்கியப்பணியாளர் பெருவிரலால்
3 வினாடி நேரம் அழுத்துகையில் குழி விழுந்த அடையாளம் இருக்கிறதா எனப் பார்ப்பார்.
இரண்டு பாதங்களிலும் குழி விழுந்த அடையாளத்தை நீங்கள் காணமுடிகிறதா?
அல்மாஸ் இரண்டு பாதங்களிலும் வீக்கம் கொண்டிருக்கிறாளா?
குழிவிழும் அடையாளம் இரண்டு பாதங்களிலும் நாம் காணவில்லை
"ஆகையால், அல்மாஸுக்கு இரண்டு பாதங்களிலும் வீக்கம் இருக்கவில்லை"
ஊட்டச்சத்து ரீதியான கால் வீக்கம் இரண்டு பாதங்களிலும் இருக்க வேண்டும்
இதுதான் கடுமையான நாள்பட்ட ஊட்டச்சத்து குறைபாட்டின் அறிகுறிகளாகும்.
அல்மாஸின் நடு புஜத்தின் சுற்றளவு 10.4 செமீ
மற்றும் அவளுக்கு இரண்டு பாதங்களிலும் கால் வீக்கம் இல்லை
அல்மாஸின் நடு புஜத்தின் அள்வீடு 11செமீ க்கும் குறைவாக இருப்பதன் காரணமாக
அல்மாஸுக்கு கடுமையான நாள்பட்ட ஊட்டச்சத்துக் குறைபாடு இருக்கிறது.
தனது 12 மாதக் குழந்தையான டாரிக்கு-விற்கு இரண்டு பாதங்களிலும் வீக்கம் இருப்பதை கண்ட
அதன் தாய் ஜுரியா கவலையுடன் குழந்தையைக் கொண்டு வந்தார்.
வீக்கம் 3 வாரங்களுக்கு முன்னர் துவங்கியது
தாய் அதற்கு சில மூலிகை மருந்தினைத் தடவினார்
ஆனால் முன்னேற்றம் காணவில்லை.
டாரிக்கு-விற்கு இருமல் அல்லது மலத்தில் ரத்தம் இருக்கவில்லை
ஆனால் அடிக்கடி காய்ச்சல் இருந்தது
வழக்கத்திற்கு மாறான உடல் அசைவுகள் இல்லை மற்றும் நாளொன்றுக்கு ஒன்றிரண்டு முறை வாந்தி இருந்தது
உடல் ஆரோக்கிய மையத்தில் ஒன்பது மாதங்கள் வரை டாரிக்கு-விற்கு தடுப்பு மருந்து கொடுக்கப்பட்டது
இதற்கான பதிவேடுகளும் இருந்தன
SNMPR பகுதியில் இருக்கும் கொஹிலா வில் வசிப்பதாக ஜுரியாஸ் குறிப்பிட்டார்..
டாரிக்கு-விற்கு கால்வீக்கம் இருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்களா?
3 வினாடிகளுக்கு விரல் அழுத்தம் கொடுத்த பின்னர் குழிவிழுந்த அடையாளத்தை நாங்கள் கண்டோம்.
"ஆகையினால், டாரிக்கு-விற்கு இரண்டு பாதங்களிலும் குழிவிழும்படியான கால் வீக்கம் உள்ளது "
டாரிக்கு கடுமையான நாள்பட்ட ஊட்டச்சத்துக் குறைபாட்டினைக் கொண்டிருக்கிறாரா?
டாரிக்கு கடுமையான நாள்பட்ட ஊட்டச்சத்துக் குறைபாட்டினைக் கொண்டிருக்கிறார்
ஏனெனில் அவர் இரண்டு பாதங்களிலும் குழி விழும் கால் வீக்கம்கொண்டிருக்கிறார்.
ஜாமியா தனது 13 மாத குழந்தை மொஹம்மதுவை ஊட்டச்சத்து சோதிப்புக்காக உடல் ஆரோக்கிய மையத்திற்கு கொண்டு வந்தார்.
" மொஹம்மதுவுக்கு பாதத்தில் கால் வீக்கம் இருக்கவில்லை,"
" மற்றும் இருமல், காய்ச்சல் அல்லது வயிற்றுப்போக்கு எதுவும் இருக்கவில்லை."
சமுதாயத்தில் இருக்கும் சம வயது கொண்ட மற்ற குழந்தைகளைப்போல
"தனது குழந்தை திடமாக தோன்றவில்லை என ஜாமியா கவலை கொண்டாள்,"
குறித்த காலப்படியான அனைத்து தடுப்பு மருந்துகளையும் மொஹம்மது எடுத்துக்கொண்டதாக அந்தத் தாய் குறிப்பிட்டாள்
மொஹம்மதுவின் பாதத்தில் ஏதேனும் குழிவை நீங்கள் காண்கிறீர்களா?
இரண்டு பாதங்களிலும் குழி விழும் கால் வீக்கம் அவருக்கு இருக்கிறதா?
மொஹம்மதுவின் பாதங்களில் குழிவிழும் கால் வீக்கம் இருக்கவில்லையாதாலால்
அவரின் இரண்டு பாதங்களிலும் எந்தக் குழிவினையும் நாங்கள் காணவில்லை.
உடல் ஆரோக்கியப் பணியாளர் நடு புஜத்தின் சுற்றளவினை அளவு எடுக்கிறார்.
நீங்கள் அளவெடுக்கும் மொஹம்மதுவின் நடு புஜ சுற்றளவினை தயவு செய்து எழுதவும்.
நீங்கள் அளவெடுத்தது எவ்வளவு?
மொஹம்மதுவின் நடு புஜ சுற்றளவு அளவீடு 11.6 செமீ
"ஆகவே மொஹம்மதுவின் நடு புஜ சுற்றளவு அளவீடு 11 செமீ க்கும் அதிகமாக,"
ஆனால் 12 செமீக்கும் குறைவாக இருப்பதாலும் கால் வீக்கம் இல்லாததாலும்
அவருக்கு மிதமான நாள்பட்ட ஊட்டச்சத்து குறைபாடுதான் உள்ளது
"மொஹம்மதுவிற்கு கடுமையான நாள்பட்ட ஊட்டச்சத்து குறைபாடு இல்லை என்றாலும் கூட, "
அவருக்கு மிதமான நாள்பட்ட ஊட்டச்சத்து குறைபாடு உள்ளது.
Comments (0)