ஃபெடரல் சுகாதார அமைச்சகம்
டபிள்யூ எல் பி தயாரிப்பு
மிகக் கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு என்றால் என்ன?
கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு என்றால் என்ன?
கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு என்பது திசு கழிவு மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டு நீர்க்கட்டு ஆகிய இரண்டையுமே குறிக்கும் சொல்.
கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டினால் உணவு உட்கொள்ளுதல் குறைகிறது
"மற்றும் / அல்லது உடல் நலக் குறைவு, அதனால் திடீர் உடல் எடை இழப்பு ஏற்படுகிறது."
"அல்லது, இருதரப்பு ஊட்டச்சத்து குறைபாட்டு நீர்க்கட்டு ஏற்படுகிறது."
"பின்வரும் நிலைகள் தொடர்ந்து இருப்பின், ஒரு குழந்தைக்கு ஆறு மாதங்கள் முதல் 18 வருடங்கள் வரை மிகக் கடுமையான "
ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படுகிறது:
புஜங்களின் நடுப்பகுதியின் சுற்றளவு
"11 சென்டிமீட்டருக்கு குறைவாக இருத்தல்,"
அல்லது இரண்டு பாதங்களிலும் அழுந்தும் நீர்க்கட்டு இருத்தல்.
"பின்வரும் நிலைகள் இருந்தால், ஆறு மாதங்களுக்கு குறைவான "
வயதுள்ள குழந்தைகளுக்கு மிகக் கடுமையான
ஊட்டச்சத்து குறைபாடு இருக்கிறது:
வெளிப்படையாக தெரியும் திசு அழிவுறுதல்
அல்லது இரண்டு பாதங்களிலும் அழுந்தும் நீர்க்கட்டு இருத்தல்.
புற நோயாளி சிகிக்கைத் திட்டத்தில் மிகக் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டை நிர்வகித்தல்
புற நோயாளி சிகிச்சைத் திட்டம்
அல்லது ஓடிபி
சமுதாய அளவில்
மிகக் கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு உள்ள
குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தப்படுகிறது.
"ஒரு ஓடிபி செயல்திட்டத்தை வடிவமைக்க, "
உங்களுக்கு பின்வரும் சிகிச்சைப் பொருட்கள் தேவைப்படும்:
மருந்துகள் மற்றும் உபகரணங்கள்;
உபயோகிக்க-தயார் நிலையிலுள்ள சிகிச்சை உணவுகள்.
"இவை உபயோகிக்க-தயார் நிலையிலுள்ள உணவுகள், மற்றும்"
தாய் அல்லது பாதுகாப்பு அளிப்பவரால் தயாரிக்கப்படத் தேவையில்லை.
இவை மிகக் கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு உள்ள
குழந்தைகளுக்கு சிகிச்சை அளிக்க
ஒரு வாராந்திர அடிப்படையில்
சிகிச்சை மைய அளவில் வழங்கப்படலாம்.
மிகக் கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு கொண்ட குழந்தைகளுக்கு
தினசரி வீட்டில் கொடுக்கப்படலாம்.
அமாக்சிசிலின்:
இது தொற்றுகளுக்கு சிகிச்சை அளிக்கும் ஒரு உயிர்க் கொல்லி
மெபெண்டஜோல் 100 மில்லிகிராம்.
அல்லது அல்பெண்டஜோல் 400 மில்லிகிராம்.
குடற்புழு நீக்கலுக்காக
மெபெண்டஜோல் மாத்திரைகள் குழந்தைகளுக்கு கொடுக்கப்படுகின்றன.
குழந்தையின் ஊட்டச்சத்து உட்கொள்ளுதலுடன்
போட்டியிடும் ஒட்டுண்ணி என்ற நோய்க்கு எதிராக சிகிச்சை அளிப்பது
வெற்றிகரமான ஊட்டச்சத்து குறைபாடு
சிகிச்சைக்கு இன்றியமையாதது.
ஃபோலிக் அமிலம்.
ஃபோலிக் அமிலம் ஒரு அத்தியாவசியமான ஊட்ட உணவு;
இது குழந்தைகளின் மிகக் குறைந்த ஊட்ட உணவு நிலையை சரிசெய்ய உதவுகிறது.
வைட்டமின் A மருந்து குப்பிகள்.
வைட்டமின் A
ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளின்
"நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பை வலுப்படுத்தவும்,"
அதன் விளைவாக அவர்களின் நோய்-எதிர்ப்புத் திறனை அதிகரிப்பதற்கும் அவசியமானது.
மணல் வாரி அம்மை தடுப்பு ஊசி
ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு மணல் வாரி அம்மை உயிர் கொல்லி நோயாகும்.
தடுப்பு ஊசி மூலம் அவர்களை பாதுகாப்பதினால்
அவர்களது உயிர் காப்பாற்றப்படலாம்.
"மணல் வாரி அம்மையைப் போலவே,"
ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு
மலேரியா தாக்கத்தின் விளைவாக
உயிரிழக்கும் வாய்ப்பு அதிகம்.
எனவே மலேரியா தாக்கும் பொழுது
அதற்கு சிகிச்சை அளிப்பதற்கு தயாராக இருப்பது முக்கியம்.
ஒரு மாதத்திற்குத் தேவையான தண்ணீர் நிரப்பப்பட்ட பிளாஸ்டிக்
கோப்பைகள் மற்றும் ஜெர்ரி கேன்கள் தேவை.
உபயோகிக்க-தயார் நிலையிலுள்ள சிகிச்சை உணவுகளுக்கான
பசியை தூண்டும் சோதனையை செய்யும் பொழுது
குழந்தைகளுக்கு குடிநீர் வழங்கப்பட வேண்டும்.
"25 கிலோகிராம் வரை உள்ள ஒரு சால்ட்டர் எடை இயந்திரம்,"
"குழந்தைகளின் எடையை கணக்கிட தட்டுக்கள் அல்லது பிளாஸ்டிக் பேஸின்,"
ஆகியவையும் தேவைப்படுகின்றன.
ஸ்கிரீனிங் மற்றும்
பின் தொடர்ச்சிக்காக
வரும் குழந்தைகளின்
புஜத்தின் நடுப் பகுதியின்
சுற்றளவை அளப்பதற்கு
இரண்டு புஜத்தின் நடுப் பகுதியின் சுற்றளவு
அல்லது எம்யூஏசி நாடாக்கள் தேவைப்படும்.
புஜத்தின் நடுப் பகுதியின் சுற்றளவு அளவைகள்
ஆறு மாதங்கள் முதல் ஐந்து வயது வரை உள்ள குழந்தைகளின்
கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டினை துல்லியமாக காட்டும்.
குழந்தைகளின் உடல் வெப்பத்தை சோதிப்பதற்காக
உங்களுக்கு ஒரு வெப்பமானி தேவைப்படும்.
"காய்ச்சல் உள்ள குழந்தைகள், ஒரு சுகாதார மையத்தில்"
உட்புற நோயாளியாக சிகிச்சை பெறுவதற்கு பரிந்துரை ஒன்று தேவைப்படலாம்.
கை கழுவுவதற்காக ஜெர்ரி கேன்கள்.
பசியை தூண்டும் சோதனையின் போது
பராமரிப்பாளரின் கைகளை சுத்தமாக வைத்திருக்க
உங்களுக்கு ஒரு கை பேஸினும் மற்றும் ஒரு மாதத்திற்கு
நீடித்திருக்கும் அளவில் ஒரு சோப்புக் கட்டியும் தேவைப்படும்.
குழந்தைகள் உண்ணும் உணவுகளைக் கையாளும் முன்னர்
தங்களது கைகளை கழுவுமாறு
பராமரிப்பாளர்கள் அறிவுறுத்தப்பட வேண்டும்.
வாரந்தோறும் ஓடிபிக்கு
வரும் குழந்தைகள்
மற்றும் பராமரிப்பாளர்களின்
"உபயோகத்திற்காக சுகாதார மையத்தில், "
ஒரு சுத்தமான கழிவறை இருப்பது அவசியம்.
"சுகாதாரமான சூழல்களை பராமரிப்பதன் மூலம், "
ஊட்டச்சத்து குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு
வயிற்றுப் போக்கு போன்ற உயிர் கொல்லி நோய்கள்
வராமல் தடுக்க முடியும்.
சுகாதார மையத்தில் ஒரு சுத்தமான கழிவறை இருப்பது
சுகாதார கல்வி நோக்கத்திற்காகவும்
முக்கியமானது.
ஓடிபி செயல் திட்டத்திற்கு
உங்களுக்கு எழுது பொருட்களும் தேவைப்படும்.
ஒவ்வொரு சுகாதார மையத்திலும்
ஓடிபி விரைவு தொடர்பு குறிப்புகள் கையேடு இருக்கவேண்டும்.
இந்த குறிப்புகள் கையேடு ஓடிபி செயல்முறையின்
ஒவ்வொரு நிலைக்குமான
வழிமுறைகளை வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளது
மற்றும் செயல்முறைகளைப் பற்றி
உங்களுக்கு இருக்கும் எந்த கேள்விகள் குறித்தும் சரிபார்க்க உபயோகிக்கப்படும்.
உங்களுடைய புற நோயாளி சிகிச்சை செயல் திட்டத்தில்
பங்கு பெறும் குழந்தைகளின் முன்னேற்றத்தை
பதிவு செய்யவும் மற்றும் கண்காணிக்கவும்
உங்களுக்கு ஓடிபி அட்டைகள் தேவைப்படும்.
செயல் திட்டத்தில் சேரும்பொழுதும் மற்றும் விலகும்பொழுதும்
குழந்தைகளின் தகவல்களை பதிவு செய்ய
பதிவேடு தேவைப்படும்.
மருத்துவ சிக்கல்கள் உள்ள நோயாளிகளுக்கு
சிகிச்சை மையங்களிலோ அல்லது
உட்புற நோயாளி யூனிட்டுகளிலோ அவர்கள் சிகிச்சை பெறுவதற்காக
அளிக்க வேண்டிய பரிந்துரை சீட்டுகள் உங்களுக்குத் தேவைப்படும்.
தன்னார்வ சமூக சுகாதார பணியாளர்கள்
குழந்தைகளை சுகாதார மையம்
அல்லது ஓடிபிக்கு
பரிந்துரை செய்யத் தேவையான
பரிந்துரை சீட்டுகளும் உங்களுக்குத் தேவைப்படும்.
உங்களுக்கு வழங்கும் பொருட்களின் உபயோகத்தை
கணக்கு வைத்துக் கொள்ள உங்களுக்கு இருப்பு அட்டைகள்
அல்லது வழங்கும் பதிவேடு ஆகியவை தேவைப்படும்.
வாராந்திர ஓடிபியின் தேதிக்கு முன்னர் மேற்கூறியவை
போதுமான அளவில் இருப்பதை
நீங்கள் உறுதி செய்துகொள்ள வேண்டும்.
உங்களுடைய புற நோயாளி சிகிச்சைத் திட்டத்திற்கு
வழங்கும் பொருட்களை நல்ல முறையில் பராமரிப்பது மிகவும் அவசியம்.
வழங்கும் பொருட்கள் குளிரான மற்றும் உலர்வான இடத்தில் வைக்கப்பட வேண்டும்.
எலிகளிடமிருந்து பாதுகாக்க ஜன்னல்களையும் கதவுகளையும்
"மூடி, பொருட்களை மரத்தட்டுகளின் மீது வைக்கவும்."
உங்களுடைய பணியிட சுற்றுச் சூழல்
மற்றும் பொருட்கள் சேமிக்கும் இடம்
ஆகியவற்றை சுத்தமாக பராமரிப்பது ஆகியவை
வெற்றிக்கு மிகவும் இன்றியமையாதவை.
ஓடிபியை சரியான முறையில் கண்காணிக்க
மாதாந்திர சிகிச்சை செயல் திட்ட அறிக்கை படிவத்தை பயன்படுத்தி
குறித்த நேரத்தில் மாதாந்திர அறிக்கையை நீங்கள் தயாரிக்க வேண்டும்.
நீங்கள் அறிக்கையை
"அலுவலகத்திற்கு அனுப்புவதுடன், அதன் நகல் ஒன்றை"
சுகாதார மையத்தில் வைத்துக் கொள்ளவேண்டும்.
Comments (0)